தமிழகத்தில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 15 நாளை தொடங்கி வைக்கிறார். சமூக நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் மூன்று லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகையுடன் குழந்தைகளின் அனைத்து விதமான கல்வி செலவுகளையும் ஏற்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
