தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்பச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, வரலாறு சிறப்புமிக்க இடங்களுக்கான சுற்றுலா என பல சுற்றுலாப் பயணிகளுக்கு சென்னையில் இருந்து மட்டுமின்றி கோவை, மதுரை போன்ற நகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் தாண்டி அண்டை மாநிலங்களுக்கும் கூட TTDC சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடகா ஆன்மீகத் தலங்களுக்கும் 7 நாள் சுற்றுலா பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கு 7 நாள் மூகாம்பிகா சுற்றுப்பயணம் என பெயர் சூட்டியுள்ளனர்.
சென்னையில் இருந்து ஓசூர், பெங்களூர், ஹளேபீடு, பேலூர், சிருங்கேரி, மைசூர், ஒகேனக்கல், தர்மஸ்தலா, உடுப்பு, கொல்லூர் மற்றும் சுப்பிரமணிய ஆகிய சுற்றுலா இடங்களுக்கு ஞாயிறு என்று காலை தொடங்கும் இந்த பயணம் அடுத்த வாரம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடையும். சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் ஞாயிறு காலை 7 மணி அளவில் பேருந்து புறப்படும். சுற்றுலாவை பற்றி ஏதேனும் தகவல் வேண்டும் என்றால் www.ttdc.com என்ற இணையதளம் மூலமாக வும் அல்லது 044-25333333, 044-25333857, 044-25333444 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுக் கொள்ளலாம். சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளாகத்திற்கு நேரில் சென்று மேலும் விவரங்களை விசாரித்துக் கொள்ளலாம். 7 நாள் மூகாம்பிகை சுற்றுலாவிற்கு ஒருவருக்கு ரூபாய் 15,000 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
