தூங்கிக்கொண்டிருந்த மாணவர்களின் கண்ணில் Fevikwik ஊற்றிய கொடூரம்…. விடுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 14, 2025

Spread the love

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாணவர்களின் கண்களில் சக மாணவர்கள் சிலர் Fevikwik என்ற வலுவான பசையை ஊற்றிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒடிசாவில் உள்ள பள்ளி மாணவர் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் திடீரென்று கண் எரிச்சல் காரணமாக எழுந்தபோது அவர்களுடைய கண்கள் ஒட்டிக்கொண்டு திறக்க முடியாத நிலையில் கதறி உள்ளனர்.

உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாணவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். மாணவர்களின் கண்களில் ஊற்றப்பட்ட Fevikwik காரணமாக பாதிப்பு ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இருந்தாலும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

   

பாதிக்கப்பட்ட எட்டு மாணவர்களில் ஒருவர் சிகிச்சை முடிந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற ஏழு மாணவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விடுதிக்குள் இந்த சம்பவம் எப்படி நடந்தது, விடுதி வார்டன்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் பங்கு என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது