மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.1.25 வழங்கும் தமிழக அரசு… எப்படி விண்ணப்பிப்பது?.. இதோ முழு விவரம்..!

By Srimathi on ஆவணி 16, 2025

Spread the love

இந்தியாவில், பின் தங்கிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக மகளிர் சுய உதவிக் குழுவை, மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இது குறிப்பாக பெண்களுக்கு, சிறு தொழில்கள் தொடங்கவும், வருமானம் ஈட்டவும் உதவுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் லிமிடெட் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இத்திட்டத்தை செயல்படுத்திவருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழுவிற்கும் ரூ. 25 லட்சம் வழங்கப்படுகிறது. குழு உறுப்பினர் ஒருவருக்கு ரூ. 1.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதம், 6 % எனவும், திரும்ப செலுத்தும் காலம் 2 1/2 வருடங்களா நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின் பங்கேற்க, ஒரு குழுவில் அதிகபட்சம் 20 நபர்கள் இருக்க வேண்டும், குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்னும் நிபந்தனைகளை இக்கழகம் விதித்துள்ளது.

   

தகுதிகள்:

   
  • வயது: 18 முதல் 60 குள் இருக்க வேண்டும்
  •  ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்
  • பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் – ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

 
  • மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் / கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பிக்கலாம்
  • மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்
  • டாப்செட்கோவின், www.tabcedco.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
  •  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

தேவைப்படும் ஆவணங்கள் :

  • ஆதார் அட்டை
  • குடும்ப அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • வருமானம் சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • பிறப்பிட சான்றிதழ்