“என்னை மன்னிச்சிடுங்க” அந்த நடிகைக்கு ஆண்களை போல்.. பழைய சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட மிருணாள் தாகூர்..!!

By Soundarya on ஆவணி 16, 2025

Spread the love

சீதா ராமம்  திரைப்படம் வெளியான நாள் முதல் யாருடா அந்த சீதா மகாலட்சுமி என நடிகை மிருனாள் தாகூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். மராத்திய நடிகையான இவருக்கு 30 வயதாகிறது. மராத்தி டிவி தொடர்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான விட்டி தண்டு எனும் மராத்தி திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதேசமயம் சீதா ராமம் திரைப்படம் தான் இவரின் முதல் டோலிவுட் திரைப்படம்.

சமீபத்தில் இவரையும் தனுஷையும் வைத்து கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தனுஷ் தனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே என்று கூறினார் மிருணாள். முன்னதாக பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவின் தோற்றம் குறித்து மிருணாள் பேசியிருந்தார். அதாவது அவரது தசைகள் ஆண்களை போல் உள்ளன. நான் அவரைவிட சிறந்தவள் என்று பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையானது. இந்நிலையில் இதற்கு மிருணாள் தாகூர் விளக்கம் அளித்துள்ளார், அதாவது தான் 19-வது வயதில், டீனேஜ் பருவத்தில் அறியாமையில் பேசிவிட்டேன். உருவக்கேலி செய்வது தன் நோக்கமல்ல, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்காக மன்னித்துவிடுங்கள்” என கூறியுள்ளார்.