திமுக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அதிகாலையில் இருந்து ED அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவருடைய இல்லம், எம் எல் ஏ விடுதி, திண்டுக்கல்லில் உள்ள இல்லம், அலுவலக உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும் அமைச்சர் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக, MLA விடுதியில் உள்ள செந்தில்குமார் அறையின் பூட்டை உடைத்து ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.இந்நிலையில் இந்த பரபரப்பு ரெய்டுக்கு மத்தியில், மு.க.ஸ்டாலின் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
