தமிழக அரசு பல்வேறு விதமான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. சொந்த தொழில் செய்வதற்கு நிதி உதவி வழங்கும் வகையில் ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதன்படி தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக 7 லட்சம் ரூபாய் முதல் 11 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் வகையில் தமிழக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக சொந்தமாக தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக உயர நினைப்பவர்களுக்காக அரசு கடன் திட்டங்களை உருவாக்கியுள்ளது.

அதன்படி மீன் மற்றும் இறால் வளர்ப்பு மூலமாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக அரசு சுமார் 7 லட்சம் முதல் 11 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகின்றது. பண்ணை அமைத்து மீன் மற்றும் இறால் வளர்ப்பது மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். மீன் மற்றும் இறால் விரும்பி களுக்காக பல்வேறு விதமான உணவு வகைகள் செய்யப்படுகின்றது. அதற்காக அதிக அளவில் மீன் மற்றும் இறால் தேவைப்படுகிறது. மற்றொரு பக்கம் மீன் மற்றும் இறாலை வாங்க வார இறுதி நாட்களில் சந்தைகளில் மக்கள் கூட்டமும் வருகிறது.

இப்படியான நிலையில் தமிழக அரசின் மீன்வளத்துறை மீன் மற்றும் இறால் வளர்ப்புக்காக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தனியாக இறால் பண்ணை அமைத்து தொழில் முனைவோர்களாக விரும்புவர்களுக்கு இந்த திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. பயோ பிளாக் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறால் வளர்ப்பதன் மூலமாக குறைந்த அளவில் நீரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தப் பண்ணை அமைப்பதற்கு மொத்தமாக 18 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதில் ஒரு பகுதி அரசு சார்பில் மானியமாக வழங்கப்படும். பயோ பிளாக் தொழில்நுட்பம் மூலமாக இறால் பண்ணை அமைப்பவர்கள் இந்த மானியத்தை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்ட முடியும். மீன்வளத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு இறால் பண்ணை அமைக்க விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக மானியம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
