ஒரு சீன் கொடுத்தாலும் காமெடி நடிகையின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த தனுஷ்… அவரே உருக்கமாக பகிர்ந்த சுவாரசிய சம்பவம்..!

By Nanthini on பங்குனி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளில் கலக்கியவர் தான் காமெடி நடிகை ஆர்த்தி. காமெடி நடிகை என்றால் மனோரமா மற்றும் கோவை சரளா என்ற பெயர் இருந்த நிலையில் அதனை தகர்த்து உள்ளே நுழைந்தவர் தான் ஆர்த்தி. முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அதன்பிறகு வடிவேலு மற்றும் விவேக் மன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்த தொடங்கினார். பிறகு முன்னணி நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக மாறினார். விஜய், அஜித் மற்றும் தனுஷ் என தமிழ் சினிமா பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஆர்த்தி நடித்துள்ளார்.

படையெடுக்கும் நட்சத்திரங்கள்... நடிகை ஆர்த்தி கணேஷ் பாஜகவில் இணைந்தார்! |  Actress aarthi ganesh joins in bjp - kamadenu tamil

   

இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் சினிமாவை தாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். திரட்டி கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆர்த்தி போட்டியின் இறுதிவரை சென்று வெளியேறினார். 1987 ஆம் ஆண்டு வெளிவந்த வண்ண கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஆர்பி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் சுமார் 65க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

   

அம்மாவையே கொன்றவர்களுக்கு இது சாதாரணம் - நடிகை ஆர்த்தி டிவிட்

 

அதன் பிறகு தான் காமெடி நடிகையாக மாறினார். தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் நடிகர் தனுஷ் உடன் படிக்காதவன் திரைப்படத்தில் இணைந்து நடித்த அருக்கானி கதாபாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில், படிக்காதவன் திரைப்படத்தில் அருக்காணி கதாபாத்திரத்தில் நடித்ததற்கு சுராஜ் சார் மற்றும் தனுஷ் சாருக்கு தான் நான் நன்றி சொல்லணும். படத்துல இப்படி ஒரு காட்சி இருக்கு அந்த ஒரு சீனுக்கு மட்டும் தான் நீங்க வருவீங்க என்று சொல்லிட்டாங்க.

padikathavan dhanush comedy reels | #shorts #hbdmsdhoni #cutecoemdy -  YouTube

நானும் போய் ரெடியாகிட்டு வந்ததும் சுராஜ் சார் அருக்காணி கதாபாத்திரம் ஓகே தான் ஆனா ஓவர் மேக்கப்பா இருக்கு இந்த ஜடை மற்றும் பல்லு எல்லாமே ரொம்ப ஓவரா இருக்கு என்று சொன்னாரு. நீங்க கொடுத்த கேரக்டருக்கு இது மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும் என்று நான் சொன்னதும் தனுஷ் சார் வரட்டும் பேசிக்கலாம் என்று சுராஜ் சார் சொன்னாரு. உடனே தனுஷ் சார் வந்ததும் ஆர்த்தி இந்த ஒரு சீன் தான் உங்களுக்கு இருக்கு உங்க இஷ்டத்துக்கு நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என்று சொல்லிட்டாரு. வேற ஒரு ஹீரோவா இருந்திருந்தா அவங்க இஷ்டத்துக்கு தான் நாம நடிச்சிருக்கணும். ஆனா தனுஷ் சார் அப்படி சொல்லவே இல்ல. அவரோட அந்த நல்ல மனசு யாருக்குமே வராது.

Watch Padikkathavan(Tamil) Movie Comedy Scene Online | Sun NXT

அன்னைக்கு அந்த படத்துல தனுஷ் சார் எனக்கு வாய்ப்பு கொடுக்கலைன்னா இன்னைக்கு நான் சினிமாவில் ஒரு நடிகையா வந்து இருக்க மாட்டேன். அது மட்டுமல்லாமல் அந்த அருக்காணி சீனியில் ஒரே ஷாட்டில் எடுத்துட்டாங்க. நான் போய் தனுஷ் சார் கன்னத்தை கிழித்து வருவேன். ஆனா அதை நானா பண்ணது தான். சீன் முடிஞ்சதும் கட் என சொல்லிட்டாங்க. என்ன ரியாக்ஷன் கொடுக்கிறது என்று யாருக்குமே தெரியல. உடனே தனுஷ் சார் எழுந்து நின்னு கை தட்டுனாரு. அங்க இருந்த மொத்த டீமும் என்னோட நடிப்பை பாராட்டுனாங்க. இன்னைக்கு நான் இப்படி ஒரு நிலைமையில் இருக்க காரணம் அன்னைக்கு நான் அந்த படத்துல நடிச்சது தான் இன்று தனுஷ் குறித்து ஆர்த்தி நிகழ்ச்சியாக பேசி உள்ளார்.