ஒத்த பாட்டுக்கு மட்டும் 25 ஆயிரம் அடி பிலிம்மை காலி பண்ணிட்டேன்.. இன்னைக்கு இப்படி நடிக்க காரணமே அந்த படத்துல நடிச்சது தான்.. மனம் திறந்த ஜீவா…!!!

By Nanthini on பங்குனி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.

பள்ளி படிக்கும்போதே அப்படி.. நடிகர் ஜீவா பற்றி இந்த விஷயம் எல்லாம் தெரியுமா

   

குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

   

Kadhal Oru Pallikoodam Song Lyrics | Aasai Aasaiyai Movie Song Lyrics

 

இந்நிலையில் ஜீவா சமீபத்தில் அடைத்த பெட்டியில் கடந்த 2003 ஆம் ஆண்டு ரவி மரியா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ஆசை ஆசையாய் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதில், ஆசை ஆசையாய் படத்தில் என் பெண்ணே  என்ற பாடல் எடுக்கும் போது சராசரியாக ஒரு படத்திற்கு 50 முதல் 60 ஆயிரம் அடி பிலிம் ரோல் ஆகும் என்று சொல்லுவாங்க. ஆனால் அந்த ஒரு பாட்டு பண்ணும் போது நான் 25 ஆயிரம் அடி காலி பண்ணிட்டேன்.

Ye Penney - Aasai Aasaiyai |Tamil FIlm Song | Jiva | Ranjith | Manisharma |

பாதி படத்தோட ஃபிலிம்மை ஒரே பாட்டுல காலி பண்ணிட்டேன். மொத்தமா படம் முடிஞ்சு அவங்க கைக்கு வரும்போது 2 1/2 லட்சம் அடி ஆச்சு. அவ்வளவு டேக் வாங்கின, சுத்தமா நடிப்பு வரவே இல்ல. இன்னைக்கு இவ்வளவு பொறுமையா நடிக்கிறதுக்கு காரணமே அன்னைக்கு அந்த படத்துல நடிச்சது தான். இன்று நல்லா பைக் ஓட்டுகிறேன் என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தில் நடிச்சது தான். ரவி மரியா சார் எனக்கு அந்த அளவுக்கு நடிப்பு சொல்லி கொடுத்தாரு. அவருக்கு தான் நான் நன்றி சொல்லணும் என்று ஜீவா பேசியுள்ளார்.