#image_title
தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர்.
டி எம் சௌந்தர்ராஜன் 10000க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் 2500க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். சினிமாவில் இருந்து அவர் விலகி இருந்த காலகட்டங்களில் அதிகளவில் மேடைக் கச்சேரிகளில் அவர் கலந்துகொண்டு பாட ஆரம்பித்தார். அதில் சினிமா மேடைக் கச்சேரிகளும் கோயில் திருவிழா போன்ற மேடைக் கச்சேரிகளிலும் பங்கேற்று பாடல்களை பாடினார்.
இதில் அவர் கோயில் நிகழ்ச்சிகளில் பாடும்போது கண்டிப்பாக சினிமா பாடல்களைப் பாடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். எத்தனையோ முறை ரசிகர்கள் கேட்டும் சினிமா பாடல்களை பாட மறுத்துள்ளார். அப்படி ஒரு சம்பவம் எம் எஸ் விஸ்வநாதனோடும் நடந்துள்ளது.
ஒருமுறை கோயில் இசைக் கச்சேரியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த தன்னுடைய இசையில் டி எம் எஸ் பாடிய “அடி என்னாடி ராகம்மா” என்ற பாடலை பாட சொல்லிக் கேட்டுள்ளார். தன்னை தொடர்ந்து பாடவைக்கும் இசையமைப்பாளராக எம் எஸ் வி இருந்தாலும் “நான் கோயில் நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்கள் பாடுவதில்லை’ என உறுதியாக சொல்லிவிட்டாராம். இப்படி முகத்திலடித்தார் போல டி எம் எஸ் சொல்லிவிட்டதால் எம் எஸ் வி சிறிது காலம் அவர் மனக்கசப்போடு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…