Categories: சினிமா

ரஜினியை குள்ளமணியுடன் ஒப்பிட்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் – அதையும் ரஜினி வீட்டில் அவரிடமே நேரடியாக சொல்லி இருக்கிறாரே…?

Spread the love

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் வினியோகஸ்தர் பைனான்சியர் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் என பொறுப்புகளை வகிப்பவர் திருப்பூர் சுப்ரமணியன். தமிழ் சினிமாவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிர்வாகிகளில் ஒருவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது, கடந்த 40 ஆண்டுகளாக நானும் ரஜினிகாந்தும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவரது புதிய படம் ரிலீஸானால் என்னிடம் போனில் அழைத்து படம் எப்படி இருக்கிறது என்று கேட்பார். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

ஆனால் ரஜினிக்கும் எனக்கும் உள்ள நட்பு ஒரு மோதலில்தான் ஆரம்பித்தது. கடந்த 1980 – 90களில் ஒரு ஹீரோ படம் ரிலீஸானால் 4 வாரங்களுக்கு பிறகுதான் அவரது அடுத்த படம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அந்த நேரத்தில் ரஜினிகாந்த் நடித்த நாட்டுக்கு ஒரு நல்லவன் படம் வெளியாகி 2 வாரங்களே ஓடிய நிலையில், ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் நான் பேசியபோது ரஜினிகாந்த், தளபதி படத்தின் தயாரிப்பாளர் ஜீவி ஆகியோரும் அந்த கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். அப்போது இதுபற்றி ரஜினியிடம் கேட்ட போது, நாட்டுக்கு ஒரு நல்லவன் படம் சரியாக போகவில்லை என்றார். அப்படி என்றால் தயாரிப்பாளரிடம் போய், அதற்கான கடிதம் வாங்கி வந்து கொடுங்கள் என்று கூறிவிட்டேன். அவரும் கர்நாடகா போய் அந்த தயாரிப்பாளரிடம் கடிதம் வாங்கி வந்து கொடுத்து விட்டார்.

அப்போது ரஜினி என்னிடம், நீங்க நாளைக்கு வீட்டுக்கு வாங்க என்று அழைத்தார். நானும் அவரது வீட்டுக்கு போனேன். அப்போது என்னிடம் பேசிய ரஜினி, எப்படி நீங்கள் என்னை போய் தயாரிப்பாளரிடம் கடிதம் வாங்கி வரச்சொல்லலாம் என்று கேட்டார். சார் எனக்கு நீங்களும் ஒண்ணுதான், குள்ளமணியும் ஒண்ணுதான். ரூல்ஸ் என்றால் ரூல்ஸ்தான். ஆளுக்கு ஏத்தபடி ரூல்ஸ்சை மாத்த முடியாது என்று சொன்னேன். நான் அப்படி வெளிப்படையாக சொன்னது ரஜினிக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டது. என்னை பாராட்டிய அவர், இன்று முதல் நாம் நல்ல நண்பர்கள் என்று சொல்லி கை குலுக்கினார். அந்த நட்பு இன்றும் தொடர்கிறது என்று திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

8 மணத்தியாலங்கள் ago