“நீ ஊதுபத்தி கலரில் அசிங்கமா இருக்க”… அடுத்த நொடியே எரியும் தீயில் விழுந்த மாணவன்… கதறியபடி தாய் அளித்த பகீர் வாக்குமூலம்….!

Spread the love

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனை சக மாணவர்கள் அவனது நிறத்தைக் கேலி செய்து, “நீ ஊதுபத்தி கலரில் இருக்கிறாய்” என்று வன்கொடுமை இழைத்ததாகவும், கை கால்களைப் பிடித்து எரியும் குப்பைக் குழியில் தள்ளியதாகவும் அந்த மாணவனின் தாய் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தாய் அளித்த புகாரில், தனது மகன் கருப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் தொடர்ந்து பாகுபாடு காட்டி வந்ததாகவும், திட்டமிட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தனது மகன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில் வேறு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த சிறுவனும் மற்ற மாணவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்றும், விளையாடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒருவரையொருவர் தூக்கி ஆட்டி விளையாடியபோது, நிலைதடுமாறி சிறுவன் குப்பைக் குழியில் விழுந்ததாக முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சாதிய பாகுபாடோ அல்லது உள்நோக்கத்துடன் கூடிய தாக்குதலோ இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். காயமடைந்த சிறுவனுக்குச் சக மாணவர்களே முதலுதவி செய்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள காவல்துறை, இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

1 மணத்தியாலம் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

2 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago