நரைமுடியை கருப்ப்பாக மாற்ற வீட்டிலுள்ள இந்த 4 பொருள் போதும்… 30 நிமிடத்தில் கருகருவென மாறும்…!!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

இப்போதெல்லாம் எல்லோருக்கும் இளம் நரைமுடி மிக சீக்கிரமாகவே வந்து விடுகிறது. இதற்கு மிகப் பெரிய காரணம் பதட்டம், மோசமான வாழ்க்கை முறை, மனஅழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம். பலர் இதற்காக கடைகளில் கிடைக்கும் ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள். அதில், ரசாயனம் காரணமாக பக்க விளைவுகள் ஏற்படும். அதிகப்படியான பயன்பாடு உச்சதலையில் அரிப்பு பொடுகு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும் .இதனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நரை முடியை சரி செய்யலாம். இது தலைமுடிக்கு முற்றிலும் பாதுகாப்பானது.   ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் ஒரு டீஸ்பூன் காபித்தூள், 2 டீஸ்பூன் மருதாணி தூள் சேர்த்து கொண்டு தேயிலை தண்ணீரை தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரை இந்த தூள் கலவையில் ஊற்றி மெதுவாக கிளற வேண்டும். தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு தடிமனான பேஸ்ட் உருவாக்க வேண்டும். மருதாணியின் நிறத்தை ஆழப்படுத்த இந்த பேஸ்ட்டை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை வைக்க வேண்டும்.  உச்ச நிலையில் இருந்து நுனிவரை சாயத்தை நன்கு தடவி இரண்டு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு தலையை தண்ணீரில் கழுவ வேண்டும். இது நரைமுடியை வேர்களில் இருந்து கருப்பாக காட்டும். நெல்லிக்காய் ஆரோக்கியமான முடியை பராமரிக்க உதவியாக இருக்கும். மேலும் முடி உதிர்வதை குறைப்பது மட்டுமல்லாமல் வேர்களில் இருந்து முடிய கருமையாக்கவும் உதவுகிறது.