ஸ்டாலின் பிரச்சாரம் செய்த தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி… கெத்தாக தூக்கிய பாஜக…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், NDA கூட்டணி பெருவாரியான இடங்களை பிடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியானது படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த தொகுதியில் பாஜக வேட்பாளரான ரஞ்சன் குமார், காங்கிரஸ் வேட்பாளர் பிஜேந்திர சௌத்ரியை விட 32,657 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

SIRக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பேரணி நடத்திய தொகுதிகளில் பாஜகவின் வெற்றி இந்தியா கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.