ஜம்மு காஷ்மீரின் நெளகாம் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. டெல்லி கார் குண்டு வெடிப்பு தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் வெடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது தீவிரவாதிகளின் தாக்குதல் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
