நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்குபவர் குருபகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றுவார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட நன்மைகளை கொடுப்பார். ஜோதிட சாஸ்திரத்தின் படி தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகத்தையும் கொடுப்பார். தேவர்கள் குருவாக கொண்டாடப்படும் குரு பகவான் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வக்கர பெயர்ச்சி அடைந்தார். இந்த பெயர்ச்சியால் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அசுபமான பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
அதன்படி மேஷ ராசியில் பிறந்தவர்கள் குருபகவான் வக்ரநிலையில் இருப்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இவ்வளவு நாள் சாதாரணமாக இருந்தது போல இனியும் இருக்க வேண்டாம். வேலையில் நிறைய பிரச்சனைகள் வரும்.
மிதுன ராசியில் பிறந்தவர்கள் வேலையில் நிறைய சிக்கல்களை பார்க்கலாம். துணையுடன் சண்டை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்போதும் வாக்குவாதங்களில் வாயை கொடுத்து அசிங்கப்பட வேண்டாம்.
துலாம் ராசியில் பிறந்தவர்கள் எவ்வளவு நாட்களாக அதிர்ஷ்டத்தை பார்த்து இருந்தாலும் முடிந்த அளவு இனிமேல் கவனத்தோடு இருக்க வேண்டும். வேலையில் புதிய எதிரிகள் வருவார்கள். நீங்கள் பேசுவது சமூகத்தில் எடுத்துக் கொள்ளப்படாத நிலை உருவாகும். முடிந்த அளவு பிரச்சனைகளை தள்ளி வைப்பது சிறந்தது.
