நம் வீட்டில் வாங்கும் பழங்கள் காய்கறிகள் அனைத்தையும் பிரிட்ஜில் போட்டு வைப்போம் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒரு வாரம் பாதுகாக்க உதவும் எளிய நடைமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பழங்கள் மற்றும் காய்கறிகளை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும். வாழைப்பழம், அவகேடா போன்ற பழங்கள் சீக்கிரம் பழுத்து விடும் என்பதால் அவற்றை தனியாக வைக்க வேண்டும். காய்கறிகளையும் தனியாக பிரித்து வைக்க வேண்டும். வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை வெளியில் வைக்க வேண்டும்.
காய்கறிகளை கவர் அல்லது டப்பாக்களில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கியவுடன் கழுவுவது ஈரப்பதத்தை அதிகரிக்கும். இது கெட்டுப் போவதை துரிதப்படுத்தும். எனவே பயன்படுத்துவதற்கு முன்பு மட்டுமே கழுவுவது நல்லது. அதே நேரம் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வது முக்கியம் என்பதால் பேப்பர் அல்லது துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாம்.
அதிக ஈரப்பதம் இருந்தால் துடைத்து காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சேமித்து வைத்திருக்கும் காய்கறி மற்றும் பழங்களை அடிக்கடி சரிபார்த்து கெட்டுப் போனதை அகற்றி விட வேண்டும். ஈரப்பதத்தை நீக்குவது கெட்டுப் போவதை குறைக்கிறது. சீல் வைக்கப்பட்ட கவரில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும். வினிகர் அல்லது உப்பு நீர் கொண்ட பாதுகாப்பு நீண்ட கால பாதுகாப்பு மட்டுமில்லாமல் சுவையையும் சேர்கிறது. வெள்ளரி, கேரட், பீட்ரூட் ஆகியவற்றிற்கு இந்த முறை ஏற்றது.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…