பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தபடி மணி கணக்கில் வேலை பார்ப்பது, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதிய உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தொப்பை மற்றும் உடல் பருமன் அதிகரிக்கிறது.
இதனால் தொப்பையை குறைக்க உடற்பயிற்சி செய்வதற்கும் நேரம் இல்லாமல் விரைவில் தொப்பையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிச்சந்தைகளில் கிடைக்கக்கூடிய பல பொருள்களை முயற்சித்து நேரத்தையும் பணத்தையும் இழந்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு பாதகமாக ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதிக செலவு இல்லாமல் விரைவில் தொப்பையை குறைப்பதற்கு ஹெர்பல் டீக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை உடலில் மெட்டோபாலிசத்தை அதிகரிப்பதுடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வயிற்றுக் கொழுப்பை வேகமாக கரைப்பதில் வினைத்திறன் மிக்கது என அறிவியல் ரீதியாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
கிரீன் டீ:
காபி மற்றும் டீயை விட குறைந்த அளவு காபைன் கொண்டது கிரீன் டீ. இதில் உள்ள சில குறிப்பிட்ட வகை ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் இருக்கும் catechines என்பது மெட்டாபாலிசத்தை 5 சதவீதம் அதிகரித்து கொழுப்பை எரிக்கும் செயல்முறையை விரைவாக்குவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைக்கின்றது. ஒரு கப் சூடான நீரில் கிரீன் டீ இலைகளை மூன்று அல்லது ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவதுடன் தொப்பை பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். இதனை இரவு உணவுக்குப் பிறகு 30 முதல் 60 நிமிடங்களுக்குள் குடிக்கலாம்.
புதினா டீ:
இயற்கையாகவே புதினா டீ காஃபின் இல்லாத மூலிகை தேநீராகும். இது புத்துணர்ச்சியூட்டும் தேநீராகவும் இருப்பதால் இரவு நேரங்களில் தூக்க பிரச்சனைகள் மற்றும் பதட்டம் படபடப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தி வயிற்று உப்பசத்தை குறைக்கவும் உதவுகிறது. மெட்டாபாலிசத்தை அதிகரித்து வயிற்றுக் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சீமை சாமந்தி:
என்றும் இளமையுடன் இருக்க விரும்பினால் நீங்கள் சீமை சாமந்தி பூக்களை கொண்டு டீ செய்து குடிக்கலாம். வயிறு சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் இது பயனுள்ளதாக இருக்கும். மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை கொடுக்கும். ஒரு கப் வெந்நீரில் சீமை சாமந்தி பூக்களை ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். தூங்குவதற்கு முப்பது முதல் 40 நிமிடங்களுக்கு முன்பு இதனை குடிக்கலாம். இதனை குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைந்து தொப்பை பிரச்சனையும் நீங்கும்
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…