“அண்ணியின் கள்ளக்காதல்…” அண்ணன் காணாமல் போனதால் பழி தீர்த்த தம்பி…. கடைக்காரருக்கு கத்திக்குத்து…. பகீர் சம்பவம்…!!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த அலாவுதீனின் மனைவிக்கும் அப்துலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை அறிந்த அலாவுதீன் அப்துல்லை கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அலாவுதீன் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அலாவுதீனின் தம்பி ஆரிஸ், அவரது நண்பர் கௌதம் ஆகியோர் நேற்று அப்துலின் கடைக்கு சென்று “எனது அண்ணியும் நீயும் பழகியதால் தான் என் அண்ணன் காணாமல் போய்விட்டார்” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் கோபத்தில் ஆரிஸ் அப்துலின் கையில் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் காயமடைந்த அப்துல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆரிஸ், கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

“என் ஆசை நிறைவேறல..” ஆனால் விடமாட்டேன்… கோவையில் பிரதமர் மோடி உருக்கம்..!!

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…

7 seconds ago

“நடுக்கடலில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு…. ஈரானுக்கு இந்தியா கொடுத்த மரண அடி வார்னிங்… டெல்லியில் தூதரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு தகவல்….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…

9 seconds ago

ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… ₹74,000 வரை சம்பளம்… பவர் கிரிட் நிறுவனத்தில் 660 பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…

37 seconds ago

ஈரான் கடலில் பதற்றம்… இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு?… நடுக்கடலில் ‘யூ-டர்ன்’ போட்ட 4 கப்பல்கள்…. என்ன நடந்தது…?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…

4 minutes ago

“அழிஞ்சு போயிரும் பாத்துக்கோங்க” இதை நான் சொன்னா நம்ப மாட்டாங்க… சீனாக்காரன் சொன்னா நம்புவாங்க… சீமான் காட்டம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச்…

5 minutes ago

“டிரம்ப் Vs ஈரான்: ‘எங்களை மிரட்ட முடியாது’ – அமெரிக்காவின் அதிரடி பதிலடியால் பதற்றம் உச்சம்… ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் காட்டும் ஆக்ரோஷம்…!

மத்திய கிழக்கில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான்…

7 minutes ago