மஞ்சளில் வண்டு, பூச்சிகள் வராமலிருக்க சூப்பர் டிப்ஸ்… இல்லத்தரசிகளே இதை பாலோ பண்ணுங்க..!!

By Soundarya on ஆனி 13, 2025

Spread the love

நம்முடைய சமையல் அறையில் மிக முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்று மஞ்சள். மருத்துவ குணம் நிறைந்த இதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. உணவில் மட்டுமின்றி ஆயுர்வேத சிகிச்சையிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை நீண்ட நாட்கள் நாம் பயன்படுத்தி வருவதன் காரணமாக இதில் வண்டு, பூச்சிகள் வந்துவிடும். இவை வராமல் இருப்பதற்கு சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம். இந்திய கலாச்சாரத்தில் மஞ்சள் புனிதமாக பார்க்கப்படுகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்பு மஞ்சளில் அதிகமாகவே இருக்கிறது. புற்றுநோய்ச் செல்களை அழிக்கும் தன்மை கொண்ட இதை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும். இல்லை என்றால் அதன் வீரியம் குறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

ஈரம் இல்லாத டப்பாவில் அடைத்து வைக்க வேண்டும். நாம் அதை எடுக்கும்போது ஈரம் இல்லாத ஸ்பூனை பயன்படுத்தி எடுக்க வேண்டும். மஞ்சள் பொடி அதிகமாக இருந்தால் ஒரே பாட்டில் சேமித்து வைக்காமல் இரண்டு மூன்று பாட்டிலில் சேமித்து வைக்கலாம். பச்சை மஞ்சளை சேமிக்கும் பொழுது மண் இல்லாமல் நன்றாக தண்ணீர் அலசி எடுத்துக்கொண்டு ஈரம் இல்லாமல் உலர்த்த வேண்டும். பிறகு அதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டு.ம் சில நாட்களுக்குப் பிறகு அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஜிப் லாக் கவரில் போட்டு பிரீஸர்களில் சேமிக்கலாம். முக்கியமாக மசாலா பொருட்களை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும். ஏனென்றால் புத்துணர்ச்சி இல்லாமல் போவதோடு சீக்கிரம் கெட்டுப் போவதற்கும் வாய்ப்பு உண்டு.