வீட்டின் சமையலறை, கழிவறை மற்றும் குழாய்களில் இருக்கும் அழுக்கு படிந்த கரைகளை சுத்தம் செய்ய விலை உயர்ந்த கிளீனிங் பொருட்களை வாங்கி பணத்தை வீணடிக்காமல் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து ஈசியாக நீக்க முடியும். அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சமையலறையில் உள்ள சிங்கிள் கரை படிந்து இருப்பது எல்லோர் வீடுகளில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இது பார்ப்பதற்கு மோசமாக இருப்பது மட்டுமில்லாமல் பாக்டீரியாக்கள் இங்கு அதிகமாக வாழும். இதை நீக்குவதற்கு முதலில் இரண்டு ஸ்பூன் புளித்த மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு சிறிய அளவு பல்துலக்கும் பேஸ்ட் சேர்க்க வேண்டும்.
பிறகு ஒரு சிட்டிகை உப்பை சேர்க்கவும். இப்போது தண்ணீர் சேர்க்காமல் இந்த மூன்று பொருட்களும் நன்றாக கலந்து கெட்டியாக பசையாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு பசை கெட்டியாக இருக்க வேண்டும். இதை கறை படிந்த பகுதிகளில் தடவ வேண்டும். கையுறை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு ஸ்டீல் ஸ்கிரப்பரால் தேய்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த ஐந்து நிமிடங்களில் புளித்த மாவில் உள்ள அமிலங்கள் பற்பசை மற்றும் உப்பில் உள்ள அப்ரேஸிவ் தன்மையுடன் இணைந்து கரைகளை உடைத்து விடும். பிறகு தண்ணீரில் கழுவினால் கறைகள் நீங்கி பளபளப்பாகும். நீண்ட நாட்களாக படிந்திருக்கும் பிடிவாதமான கறைகளை நீக்க முடியும்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…