வீட்டிலிருக்கும் புளித்த மாவை வைத்தே… கறை படிந்த சிங்கை பளிச்சென்று மாற்றலாம்.. இதோ சூப்பர் டிப்ஸ்..!!

By Soundarya on ஆனி 16, 2025

Spread the love

வீட்டின் சமையலறை, கழிவறை மற்றும் குழாய்களில் இருக்கும் அழுக்கு படிந்த கரைகளை சுத்தம் செய்ய விலை உயர்ந்த கிளீனிங் பொருட்களை வாங்கி பணத்தை வீணடிக்காமல் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து ஈசியாக நீக்க முடியும். அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சமையலறையில் உள்ள சிங்கிள் கரை படிந்து இருப்பது எல்லோர் வீடுகளில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இது பார்ப்பதற்கு மோசமாக இருப்பது மட்டுமில்லாமல் பாக்டீரியாக்கள் இங்கு அதிகமாக வாழும்.  இதை நீக்குவதற்கு முதலில் இரண்டு ஸ்பூன் புளித்த மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு சிறிய அளவு பல்துலக்கும் பேஸ்ட் சேர்க்க வேண்டும்.

பிறகு ஒரு சிட்டிகை உப்பை சேர்க்கவும். இப்போது தண்ணீர் சேர்க்காமல் இந்த மூன்று பொருட்களும் நன்றாக கலந்து கெட்டியாக பசையாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு பசை கெட்டியாக இருக்க வேண்டும். இதை கறை படிந்த பகுதிகளில் தடவ வேண்டும். கையுறை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு ஸ்டீல் ஸ்கிரப்பரால் தேய்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த ஐந்து நிமிடங்களில் புளித்த மாவில் உள்ள அமிலங்கள் பற்பசை மற்றும் உப்பில் உள்ள அப்ரேஸிவ்  தன்மையுடன் இணைந்து கரைகளை உடைத்து விடும். பிறகு தண்ணீரில் கழுவினால் கறைகள் நீங்கி பளபளப்பாகும். நீண்ட நாட்களாக படிந்திருக்கும் பிடிவாதமான கறைகளை நீக்க முடியும்.