சூப்பர் நியூஸ்..! AI மூலம் செயல்படும் டயாலசிஸ் கருவி அறிமுகம்… ஏழை மக்களுக்கு இது ஓர் வரப்பிரசாதம்..!!

By Soundarya on ஆனி 16, 2025

Spread the love

ரெனாலிக்ஸ் நிறுவனமானது AI மூலமாக செயல்படும் உலகின் முதல் ஸ்மார்ட் ஹீமோ டயாலிசிஸ் கருவியை அறிமுகம் செய்திருக்கிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரெனாலிக்ஸ் ஆர்.எக்ஸ்.டி 21 என்ற ஸ்மார்ட் ஹீமோ டயாலிசிஸ் கருவி அறிமுகம் செய்திருக்கிறது. இதனை தொலைதூரத்தில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்க முடியும். மருத்துவ கண்காணிப்பும் சடத்தியம் தான். இதனுடைய ஆரம்ப விலையானது ஆறு லட்சம் ரூபாய். கிராமப்புற மற்றும் வளர்ந்து வரும் நகர மக்களும் இந்த சிகிச்சையை பெற முடியும்.

இது குறித்து ரெனாலிக்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குனர் கூறுகையில், “அடுத்த நான்கு வருடங்களில் 800 கோடியை முதலீடு செய்வதன் மூலமாக உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். 2025-26 நிதியாண்டில் ஐந்தாயிரம் கருவிகளை தயாரிக்கவும் 2027-28 இல் கூடுதலாக 1500 கருவிகளை தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். எங்களுக்கு பெங்களூர் ,மைசூர், மும்பையில் நிறுவனங்கள் உள்ளது. எங்களுடைய கருவியின் விலை குறைவாக இருப்பதால் ஏழை நோயாளிகளும் இதனால் பயன் பெற முடியும். சிறுநீரக பராமரிப்பில் இந்த கருவி புரட்சியை ஏற்படுத்தும். இதனால் நாட்டின் சிறுநீரக சுகாதார உட் கட்டமைப்பு வலுப்பெறும்” என்றும் கூறியுள்ளார்.