“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” பொறி விற்று பிழைத்த ஏழை… அடித்து தூக்கி எறிந்து அராஜகம் செய்த ரவுடி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக் கூட இல்லாமல் நின்றுகொண்டு கடலை மற்றும் பொரி விற்றுத் தன் பிழைப்பைப் பார்த்து வந்த ஏழை வியாபாரி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஷ்டப்பட்டு உழைத்து, யாரையும் கையேந்தி நிற்காமல் சுயமரியாதையோடு பிழைப்பு நடத்தி வந்த அந்த ஏழை முதியவரின் வியாபாரக் கூடையை, அங்கே வந்த ரவுடி ஒருவன் மிருகத்தனமாக எட்டி உதைத்து, தானியங்கள் முழுவதையும் சாலையில் கொட்டி நாசம் செய்துள்ளான். தன் வாழ்வாதாரமே வீதியில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அந்த ஏழை வியாபாரி கண்ணீர் விட்டு அழுது துடித்த காட்சி காண்போரின் நெஞ்சைப் பிழிவதாக அமைந்தது.

   

இந்தக் கொடூரச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியதை அடுத்து, “ஏழையின் வயிற்றில் அடித்த இந்த ரவுடியை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றும், “பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்றும் பாட்னா போலிஸுக்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, வீடியோவை ஆதாரமாகக் கொண்டு பாட்னா போலிஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த அராஜக நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.