“மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்…” தூக்கி வீசப்பட்டு கை,கால், முதுகெலும்பு முறிந்து ரத்த வெள்ளத்தில் துடித்த நபர்…. நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது அதிவேகமாக வந்த கார் மோதி வீசி எறியப்பட்ட விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி அதிகாலை 4:35 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அமைதியாகச் சாலையைக் கடக்க முயன்றபோது, அசுர வேகத்தில் வந்த டாடா பஞ்ச் கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. காரின் பலத்த மோதலில் அந்த நபர் காற்றில் தூக்கி வீசப்பட்டுச் சாலையில் ரத்த வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டார்.

   

https://twitter.com/HateDetectors/status/2100118647998132397

   

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவரது கை, கால் எலும்புகள் முறிந்ததுடன், முதுகெலும்பிலும் பலத்த முறிவு ஏற்பட்டு உயிருக்குப் போராடி வருவது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பான நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பிஸ்ரக் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய டாடா பஞ்ச் காரைப் பறிமுதல் செய்து கொடூர டிரைவரைக் கைது செய்துள்ளனர்.