காலையிலேயே ஷாக்..! எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கிளம்பிய 3 பேர்… அதிமுகவில் திடீர் பரபரப்பு..!!

By Soundarya on தை 10, 2026

Spread the love
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேரடி நேர்காணலை நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற நிகழ்வில், சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 11 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ள இடைப்பாடி தொகுதியில் போட்டியிட அவரைத் தவிர மேலும் 3 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தத் தகவலை எடப்பாடி பழனிசாமியே நேர்காணலின் போது வெளிப்படையாக அறிவித்தார். கட்சியின் பொதுச்செயலாளர் போட்டியிடும் தொகுதியிலேயே மற்றவர்களும் விருப்ப மனு அளித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அரசியல் ரீதியான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.