நெஞ்சே பதறுது…!! மின்னல் வேகத்தில் வந்த கார்…! “பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இருவர்…” வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on மார்கழி 19, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெப்பள்ளி பகுதியில், அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பெரும் விபத்து நிகழ்ந்தது. தலைக்கவசம் அணியாமல் சாலையைக் கடக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

இந்த விபத்தின்போது இருசக்கர வாகனம் அருகிலிருந்த பாதசாரி ஒருவர் மீதும் மோதியதில் அவரும் காயமடைந்தார். காயமடைந்த மூன்று நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு கன்கிபாடு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கார் மோதலுக்கு முன்பாக வேகத்தைக் குறைக்க முயன்றும், கட்டுப்பாட்டை இழந்து இளைஞர்கள் மீது மோதியது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.