2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்ததாக தமிழகத்தை குறி வைத்துள்ளது. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு அதிமுகவே அதன் தோல்விக்கு காரணமாகி விடுமோ என்ற பயம் உள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவு மற்றும் உட்கட்சி பிரச்சனை போன்றவை பாஜகவின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் தான் அதிமுகவின் பிரிவினையை சரி செய்து திமுகவிற்கு எதிர்க்கட்சியாக வரவேண்டும் என பாஜக திட்டம் தீட்டியது.
ஆனால் இபிஎஸ் அதற்கு இடம் கொடுக்காமல் உள்ளார். அதிமுகவின் வருகையால் பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியது பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியது. அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க எவ்வளவு முயற்சி செய்தோம் ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஓபிஎஸ் டெல்லி சென்றபோது கூட அமித்ஷாவே என்னை அழைத்தாலும் நான் டெல்லி செல்ல மாட்டேன், அவரும் என்னை அழைக்க மாட்டார் என்ற தினகரன் கூறினார். இதனால் பாஜகவுக்கும் தினகரனுக்கும் இடையில் சச்சரவு நிலவி வருகிறது.
இந்நிலையில்தான் ஜனவரி ஒன்பதாம் தேதி அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே தினகரன் ஜனவரி 5 ஆம் தேதி அமமுக பொதுக்குழுவை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அமித்ஷா தமிழக வரும்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று கூறப்பட்ட காரணத்தால் டிடிவி தினகரன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
