#image_title
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மனதை கவரும் வகையிலான சீரியல்கள் வெளியாகி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது. அந்த வகையில் சீரியல்களை போட்டி போட்டுக்கொண்டு சேனல்கள் ஒளிபரப்பு செய்து வருகிறது. இருந்தாலும் இதில் சிம்மாசனத்தில் இருப்பது சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் தான். அதற்கு முக்கிய காரணம் அடுத்தடுத்து புதுப்புது சீரியல்களை கொண்டு வந்து மக்கள் மனதை கொள்ளை அடித்து விடுகிறார்கள்.
தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகமான ரேட்டிங் இடத்தை பிடித்திருப்பது சன் டிவி சீரியல்கள். ஆனாலும் அடுத்தடுத்து மூன்று புது சீரியல்கள் வரிசையில் காத்திருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதமாக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல்2. இந்த மாத இறுதியில் வரப்போகிறது. ஆனால் இந்த முறை குணசேகரன் அளவிற்கு நான்கு மருமகளும் வாடிவாசலை தாண்டி எகிறும் காளையாக அவர்களுடைய லட்சியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அடுத்து 2018 ஆம் வருடம் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஆரம்பித்து கிட்டத்தட்ட 1300 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய ரோஜா சீரியலும் தற்போது இரண்டாம் பாகத்துக்கு தயாராகியுள்ளதாம். ஆனால் இதில் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா நல்காரி கமிட்டாகி உள்ளார். இவருக்கு ஜோடியாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூரியன் நடிக்கப் போவதில்லை.
அடுத்ததாக அன்பே வா சீரியல் மூலமாக அறிமுகமான டெலினா டேவிட் இரண்டாவது சீரியலாக ஆடுகளம் என்ற சீரிய வரவுள்ளது. இப்படி இந்த மூன்று சீரியல்களும் அடுத்தடுத்து சன் டிவியில் ஒளிபரப்ப போவதால் இனி டிஆர்பி ரேட்டிங் பறக்க போகிறது. சன் டிவியோடு போட்டி போடுவதற்கு மற்ற சேனல்கள் பக்கத்தில் கூட நெருங்க முடியாது என்று பேசப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…