பனையூரில் பரபரப்பு..! இன்னும் சற்றுநேரத்தில் தவெகவில் இணையும் 3 முக்கிய புள்ளிகள்… எடப்பாடிக்கு செம ஷாக்..!

By Soundarya on தை 5, 2026

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் மிகத் தீவிரமான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்ணபாஸ், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எல்.பெரியசாமி மற்றும் முன்னாள் ஐஜி ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளனர்.

இவர்கள் மூவரும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்து, கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களான செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, விரைவில் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் இவர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணைத்துக் கொள்ள உள்ளனர். பொங்கலுக்குப் பிறகு தவெக-வின் கூட்டணி மற்றும் சேர்க்கை குறித்த அதிரடி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முக்கியப் பிரமுகர்களின் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.