“15 நாள் பீகாருக்கு சென்று பயிற்சி எடுத்தேன்…” மனைவியை கொன்ற இன்ஜினியரின் கொடூர பிளான்…. பெற்றோர் இல்லாமல் தவிக்கும் பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on தை 5, 2026

Spread the love

பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி உதவி மேலாளராகப் பணிபுரிந்த இவரது மனைவி புவனேஸ்வரி, கணவரின் கொடுமை தாளாமல் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததோடு, நீதிமன்றத்தில் விவாகரத்தும் கோரியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தனது மனைவியைப் பழிவாங்க முடிவு செய்து கடந்த டிசம்பர் 24-ம் தேதி கொடூரத்தை  அரங்கேற்றியுள்ளார். இந்தக் கொலையைச் செய்வதற்கு முன்னதாக, பாலமுருகன் மூன்று முறை பீகார் மாநிலத்திற்குச் சென்று சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வாங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

மேலும், துப்பாக்கியைச் சரியாகக் கையாளுவதற்காக அங்கேயே 15 நாட்கள் தங்கிப் பயிற்சியும் எடுத்துள்ளார். முறையாகத் திட்டமிட்டுத் தனது மனைவியைத் தீர்த்துக்கட்டிய பாலமுருகனை பெங்களூரு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு படித்த பொறியாளர் தனது மனைவியைக் கொல்ல வெளிமாநிலத்திற்குச் சென்று பயிற்சி எடுத்த விவகாரம் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.