MGR இயக்கி நடித்த 3 மாபெரும் படங்கள்.. 200 நாள் கடந்து பல கோடி வசூலை பெற்ற உலகம் சுற்றும் வாலிபன்..

By Ranjith Kumar

Published on:

எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டாலே 6 முதல் 60 வயது ஆள் வரை துள்ளி குதிக்கும் அளவிற்கு பல ரசிகர் படைகளையே தன் பின்னால் வைத்திருந்தார். இவர் சினிமா அடி வேர் முதல் அரசியல் ஆலம்வரை பார்த்தவர். தமிழ் சினிமாவில் எடுத்துக்காட்டிற்கும் சரி முதன்மை வாதியாகவும் பார்க்கப்படும் ஒரே ஆள் எம்ஜிஆர் மட்டும் தான். இதுவரை தமிழகத்தில் எம்ஜிஆரை பிடிக்காத ஒரு நபர் கூட இருக்க முடியாது.

அந்த அளவுக்கு எம்ஜிஆர் நடிப்பிலும் சரி அரசியல் மூலமாக மக்கள் மனதிலும் சரி நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளார். அப்படி பேர் போன பல படங்கள் இவர் நடித்துள்ளார். தற்போது இவரே இயக்கி இவரே நடித்து 200 நாட்கள் மேல் ஓடிய படங்கள் உள்ளது. அதுதான்,

   

அந்த காலத்தில் தொழில்நுட்பம் எதுவும் இல்லாமல் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்ட படம் தான் நாடோடி மன்னன். இப்படத்தை 1958 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களே வசனம், கதை எழுதி படத்தை முதல் முதலில் இயக்கி அவரின் நடிப்பில் வெளிவந்த படம் தான் இது. இப்படத்தின் வெற்றி விழா மதுரை மைதானத்தில் நடந்த பொழுது இவரை காண்பதற்காக இரண்டு லட்ச ரசிகர் கூட்டங்கள் கூடின. அந்த சமயத்தில் இப்படம் 100 நாட்கள் மேல் ஓடி ஒரு கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றது.

1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களே இயக்கி நடித்து வெளிவந்த படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். முருகன், ராஜு என்ற இருவரிடத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார். சிங்கப்பூர் ஆங்காங் போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்று பெயரையும் பெற்றது. இப்படம் வெளிவந்து 200 நாட்களுக்கு மேல் ஓடி மகத்தான சாதனையை படைத்தது.


1978 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் அவர்கள் கடைசியாக இயக்கி நடித்த படம் தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இப்படம் வெற்றிக்கு பின் தான் தமிழகத்தின் முதலமைச்சராக ஆனார். எழுத்தாளர் அகிலனின் கயல்விழி என்ற புத்தகத்தின் ஒரு பாகத்திலிருந்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படம்.

author avatar
Ranjith Kumar