பிரபல பாடகியின் பாட்டைக் கேட்டு கண்கலங்கி அழுத கலைஞர் மற்றும் MGR.. இதனால் இரவு முழுவதும் தூங்காத பாடகி..

By Ranjith Kumar

Published on:

தமிழகத்தில் மாபெரும் பாடகராகவும் கர்னாடிக் இசைஞானியாகவும் வலம் வந்தவர் தான் எல் ஆர் ஈஸ்வரி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பழமொழிகளில் பல சிறப்பான பாடல்களை பாடி பல அவார்டுகளை குறித்துள்ளார்கள். இவர் சிறப்பாக பாடியதற்காக கலைமாமணி அவார்டும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலைக்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான சிவிலியன் விருதை இவர் பெற்றது குறிப்பிடத்தக்க விஷயம்.

இவர் பாடிய பல சிறப்பான பாடல்கள் உண்டு, அதில் முக்கியமாக தற்போது வரை மறக்க முடியாத அளவு சிறு கோயில்களில் இருந்து பெரிய ஆலயம் வரை தற்போது வரை ஒழிக்கப்படும் பாடல் தான் செல்லாத்தா, கற்பூர நாயகியே, வருவாய் வருவாய், தெய்வம் தந்த திவ்ய குமரன், வாராயோ தோழி போன்ற பாடல்கள் இதில் அடங்கும். இவர் இந்திய அளவு புகழ்பெற்ற பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். முக்கியமாக எம் எஸ் விஸ்வநாதன், டி பி ராமமூர்த்தி, கே.வி மகாதேவன், குன்னக்குடி விஸ்வநாதன். இவர் சிறப்பான குரல் வளையல் மூலமாக தமிழ் சினிமாவில் பல பெப்பியான பாடல்களை பாடி பெப்பி சிங்கர் என்று பட்டமும் பெற்றுள்ளார். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் என்று பாடிய பல ஃபேமஸான பாடல்கள் உண்டு.

   

அதில், தேவுடா ஜெஸினா மனசுல்லா, தூரடிண்டா பண்டந்தா பாடலாகும். இதேபோல் இவர் அந்த சமயத்தில் அண்ணா அவர்களுக்காக பாடிய பாடல் எம்ஜிஆர் கலைஞரையே கண் கலங்க வைத்ததாம். ஒரு மேடையில் வைத்து எதையும் தாங்கும் இதயம், கம்பன் சிலை அருகே என்ற இரு பாடலையும் அண்ணாவை போற்றும் வகையில் இருக்கும் பாடலை பாடியிருந்தாராம். தற்போது இவரின் சிறந்த குரலால் மிகச் சிறப்பாக பாடிய போது, மேடையில் இவர் பாடியதை பார்த்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் மற்றும் கலைஞர் இருவரும் இவர் பாடலில் மூழ்கி மெய் மறந்து கண் கலங்க ஆரம்பித்து விட்டார்களாம்.

இவர் பாடிய நுணுக்கத்தை கேட்ட இருவருக்கும் அடக்கிக் கொள்ள முடியாத அளவு அழுகை வந்ததாம். அதை தெரிந்த கொண்ட எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு மனவேதனையை வந்து விட்டதாம். இதை ஒரு பத்திரிக்கை நேர்காணலின் போது கூட சொல்லி இருக்கிறார், என் பாடலைக் கேட்டு கண்கள் இங்கிய எம்ஜிஆர் கலைஞரையும் பார்த்தபோது எனக்கு அன்று இரவு முழுக்க தூக்கமே வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

author avatar
Ranjith Kumar