அடியே அருந்ததி என கர்ஜித்து புகழின் உச்சிக்கே சென்றவர் தான் பாலிவுட் நடிகர் சோனு சூட். அருந்ததி படத்தில் இவர் நடித்த பசுபதி கேரக்டரை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்த சோனு சூட், நிஜ வாழ்க்கையில் ஹீரோ.

Sonu sood in kallazhagar
அவர் கொரோனா லாக்டவுன் நேரத்தில் மக்களுக்கு செய்த உதவிகள் தான் அதற்கு காரணம். சோனு சூட் தற்போது ரசிகர்கள் உடன் உரையாடும்போது அவருக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என ஒருவர் கேட்டிருக்கிறார். தனக்கு விஜயகாந்தை தான் அதிகம் பிடிக்கும் என அவர் கூறி இருக்கிறார். “எனக்கு தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தது அவர் தான். கள்ளழகர் படத்தில் அவருடன் நடித்து இருக்கிறேன்” என சோனு சூட் தெரிவித்து இருக்கிறார்.

sonu sood modeeling days
மேலும் அவர் கூறும்போது, “என்னுடைய முதல் படமான கள்ளழகர், விஜயகாந்த் கொடுத்த பரிசு. என்னுடைய இந்த ஸ்டில் அவர் கண்ணில் பட்ட சிறிது நேரத்திலேயே, நான் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். என் திரைப் பயணத்தை அவருக்காக அர்ப்பணிக்கிறேன். உங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணுவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Sonu sood and vijayakanth in kallazhagar
கள்ளழகர் படத்தின் கிளைமேக்ஸில் நடிகர் விஜயகாந்திற்கும், சோனுவிற்கும் சண்டைக்காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். இந்த சண்டைக்காட்சிக்காக சோனு, தனது உடலை கட்டமைக்க பயிற்சி தேவை, அதற்கு ஒரு மாதகால அவகாசம் தேவை என்று கேட்டுள்ளார். எனவே, விஜயகாந்த் உடனே படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். இது குறித்து சோனு, அன்று நான் பயிற்சி பெறுவதற்காக, தனக்கு கால அவகாசம் கொடுத்து படப்பிடிப்பையும் நிறுத்தினார். அவர் செய்த காரியத்தால் நான் இன்று பிரபலமான நடிகராக இருக்கிறேன். அவருக்கு நான் என்றும் கடமைபட்டிருக்கிறேன் என்று கூறி உள்ளார்.