வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரிய நடிப்பில் வெளியான விடுதலை 2 திரைப்படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி டஜன் கணக்கிலான திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அந்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அலங்கு:
எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மனிதனுக்கும் நாய்க்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் கதைக்களமாக அமைந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள நிலையில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
ஸ்மைல் மேன்:
ஷியாம் பிரவீன் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ள நிலையில் திரில்லர் படமான இந்த திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
ராஜா கிளி:
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் தம்பி ராமையா ஹீரோவாக நடித்துள்ள ராஜா கிளி திரைப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு கதை மற்றும் வசனம் என அனைத்தையும் தம்பிராமையா செய்துள்ள நிலையில் சமுத்திர கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படமும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.
திரு மாணிக்கம்:
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி கதையை நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படமும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
கூரன்:
நிதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், ரோபோ சங்கர் மகள் இந்திரஜா மற்றும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.
பரோஸ்:
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கி நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார். ஆண்டனி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என்று வெளியாக உள்ளது.
சிறு பட்ஜெட் படங்கள்:
ரெபா மோனிகா ஜான் நடித்த மழையில் நனைகிறேன், இது உனக்கு தேவையா, நெஞ்சு பொறுக்குதில்லையே, பீமா சிற்றுண்டி, கிச்சா சுதீப் நடித்த மேக்ஸ், பாகையாகிய சிறு பட்ஜெட் திரைப்படங்களும் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ளது.