விடுதலை-2ல் இந்த நடிகருக்கு பதில் நடிக்க இருந்தது பிரகாஷ்ராஜாம்.. நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரே..!

By Soundarya on மார்கழி 23, 2024

Spread the love

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வெளியாகி உள்ள இரண்டாம் பாக திரைப்படம் தான் விடுதலை 2. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சூரி நடிக்க விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சமூகப் பிரச்சனையை பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அற்புதமாக எடுத்துக் கூறும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

   

பெருமாள் வாத்தியார் யார் என்றே தெரியாமல் அவரை சந்திக்கும் கான்ஸ்டபிள் குமரேசன் போலீஸ் படையாலையே பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை தனியாக ஒரு சின்ன டீமுடன் போராடி பிடித்துக் கொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடைந்திருக்கும். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் யார் ஒரு சாதாரண கூலி தொழிலாளி எப்படி புரட்சி வீரராக மாறுகிறார் என்ற கதையை வெற்றிமாறன் இயக்கிய நிலையில்  2 நாட்களுக்கு முன்பு முன்தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

   

#image_title

 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. படம் வெளியான முதல்நாள் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் வசூல் செய்தது . மேலும் கடந்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் சற்று அதிகரித்து இருக்கிறது. முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் 15 கோடியும் உலக அளவில் இரண்டு கோடியும் வசூல் செய்திருந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கிஷோர் குமார் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருப்பார். இதில் முதலில் கிஷோர் குமாருக்கு முதலாக பிரகாஷ்ராஜ்  தான் கமிட்டாகி சில நாட்கள் நடித்த நிலையில் கால்ஷீட் காரணமாக படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியதாக கூறப்படுகிறது.