maths

சிறியவர் முதல் பெரியவர் வரை ஆட்டி படைக்கும் “கணித பயம்”…. இது உளவியல் ரீதியான பிரச்சனையா இல்லை கற்றல் குறைபாடா…?

By admin on மார்கழி 23, 2024

Spread the love

கல்வியை பொருத்தவரையில் சிறியவர்கள் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் கணிதம் என்றாலே ஒரு பயம் இருக்கும். இருப்பதிலேயே கடினமான ஒரு பாடம் என்றால் அது கணிதம் தான். பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ரிசல்ட் வந்த பிறகு கணிதத்தில் எத்தனை மார்க் என்பது முதலில் கேட்பார்கள். அப்படி ஒரு முக்கியத்துவம் இந்த கணித பாடத்திற்கு இருக்கிறது. அதை பார்த்து பயப்படும் பலர் இங்கு இருக்கிறார்கள். அதில் கணித பயம் எதனால் ஏற்படுகிறது இது ஒரு உளவியல் சம்பந்தமான பிரச்சனையா அல்லது கற்றல் குறைபாடா என்பதை பற்றி இனி காண்போம்.

   

கணிதம் என்றாலே ஒரு கடினமான பாடம். கணிதத்தில் ஒருவர் நன்றாக படித்து மதிப்பெண் பெற்றால் அவர் அறிவாளி கணிதத்திற்கு டியூஷன் செல்ல வேண்டும் என்று அந்த பாடத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கணிதம் என்றால் ஒரு பதற்றத்தை உணர்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வருகிறது. கணிதம் தொடர்பான பயத்திற்கு Maths Phobia என்றும் கூறுகிறார்கள். இது சம்பந்தமாக அமெரிக்காவில் நடத்த ஆய்வில் கணித பயம் என்பது ஒருவித நோய் அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் ஏறக்குறைய 93 சதவீதம் தங்களுக்கு கணிதம் குறித்த பயம் ஓரளவு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

   

இதற்கு காரணம் நம்முடைய கல்வி முறை என்றும் கூறுகிறார்கள். சிறு வயதிலிருந்தே தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளிகளில் கணிதத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதற் பாடங்களில் இருக்கும் சிக்கலான கணக்குகளும் சில ஆசிரியர்களின் கண்டிப்புத்தன்மையும் மாணவர்களுக்கு இப்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது உளவியல் ரீதியாக கணிதம் ஒரு கடினமான பாடம் என்பது மூளையில் பதிவாகி அது ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

 

நன்றாக படித்து கணிதத்தில் மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் கூட எங்களுக்கும் அந்த பதட்டம் இருக்கிறது என்று தான் கூறியிருக்கிறார்கள். ஒரு வீட்டில் இருக்கும் கணவன் மனைவி கூட ஒருவரை ஒருவர் கணக்கு வழக்கை நீ பார்த்துக் கொள் என்று ஒருவரை ஒருவர் ஒப்படைத்துக் விடுவதை பார்த்திருப்போம். அப்படி ஒரு தாக்கத்தை இந்த கணிதம் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அளவுக்கு இது உளவியல் பிரச்சனையாகவே மாறி இருக்கிறது.

கணித பயத்தை போக்க வேண்டியது ஆசிரியர்களுடைய கடமை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எப்படி மற்ற பாடங்களை எல்லாம் ஒரு சந்தோஷமாக விளையாட்டுத்தனமாக கற்பிக்கிறார்களோ அது போலவே கணிதத்தையும் ஒரு இலகுவான பாடமாக அவர்கள் மாணவர்களுக்கு புரியும்படியாக சொல்லி கொடுத்துவிட்டால் அனைவருமே அதில் சிறந்து விளங்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. அதிகமாகப் போனால் ஒரு சிலருக்கு கணிதத்தை கற்றல் குறைபாடினால் கூட இந்த பயம் ஏற்படலாம் என்கிறார்கள். Dyscalculia என்ற கற்றல் குறைபாடு இருக்கும் மாணவர்களுக்கு கணித பயம் அதிகமாக இருக்கும். ஆனால் பொதுவாக அனைவருக்கும் கணிதம் என்றால் பயம் என்பது நம் நாட்டில் அந்த கணித பாடத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு பிம்பம் தான் அனைவர் மனதிலும் அது சென்று ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.