வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரிய நடிப்பில் வெளியான விடுதலை 2 திரைப்படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. கௌதம் மேனன் தொடங்கி ராஜுவ் மேனன், சேத்தன், இயக்குனர் தமிழ் மற்றும் இளவரசி என பலரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அப்படி விடுதலை படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்த அப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு வெவ்வேறு விதமான கேரக்டர்களில் நடிக்க வைத்துள்ளார். விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தில் வேல்ராஜ் போலீசாக நடித்திருந்தார்.
ஆனால் விடுதலை இரண்டாம் பாகத்தில் அதே வேல்ராஜ் பண்ணையாராக நடித்திருக்கிறார். ஒரே நபரை இரண்டு வெவ்வேறு கேரக்டர்களில் நடிக்க வைத்துள்ளதை எப்படியோ கண்டுபிடித்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அதை கலாய்த்து பதிவு போட்டு வருகிறார்கள். வெற்றிமாறனுக்கு முட்டுக் கொடுப்போர் சங்கம் என்று குறிப்பிட்டு போலீஸ் வேல்ராஜ் எப்படி பண்ணையார் ஆனார் என்பதற்கு ஒரு கதையை உருட்டி உள்ளார். அதாவது இரண்டாம் பாகத்துல வர வேல்ராஜ் பண்ணையார் இருக்காரு இல்ல, அவருடைய பையன் தான் முதல் பாக போலீஸ் வேல்ராஜ், பண்ணையார் தன் கிட்ட வேலை செஞ்ச பெண்களில் ஒரு பெண்ணை பதம் பார்க்க அந்த பெண்ணுக்கு பிறந்தது தான் போலீஸ் வேல்ராஜ்.
பண்ணையார் வேல்ராஜ் வேலைக்காரி கர்ப்பமாய் இருப்பதை அறிந்து அவளால் சொத்து பத்தில் பெரிய பிரச்சனையாகும் என்று கருதி அவரை ஊரை விட்டு விரட்டி விட்டார். போலீஸ் வேல்ராஜ் தன்னுடைய அம்மா பண்ணையாரால் விரட்டியடிக்கப்பட்டு சென்னையில் வாழ்ந்து தன்னை வளர்த்த கதையை பிறகுதான் தெரிந்து கொள்கின்றார். பிறகு தனது அம்மாவிடம் தான் பிறந்த கதையை கேட்ட போலீஸ் வேல்ராஜ் பண்ணையாரின் அடாவடித்தனங்களை எதிர்க்கவும் அவர் பொட்டத்தை அடக்கவும் பண்ணையார் கூலி தொழிலாளிகளிடம் காட்டும் வர்க்க பேதங்களை ஒதுக்கவும் போலீஸ் வேலையில் சேர்ந்து பணியாற்றுகிறார்.
ஆனால் முதல் பாக போலீஸ் ராஜ் தன்னுடைய பண்ணையார் அப்பாவை தனது அப்பா தான் என்று பொதுவெளியில் சொல்லிக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை அதன் காரணமாக வேல்ராஜ் முதல் பாகத்தில் போலீசாகவும் இரண்டாம் பாவத்தில் பண்ணையாளர் ஆகவும் காட்டப்பட்டுள்ளார் என்று ஒரு கதையை உருட்டி உள்ளனர். தற்போது இதுதான் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.