உலகம் முழுக்க பல அணைகள் உள்ளது, குறிப்பாக நம் தமிழகத்தில் எத்தனையோ அணைகள் எத்தனையோ வரலாறுகள் உள்ளன. அவை மக்களுக்காக கட்டப்பட்டது. ஆனால் ஒரு அணை பூமி சுற்றுவதையே மெதுவாக்குகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதோ. அந்த அணையின் பெயர் கார்ஜஸ் டேம்.

Sunyat sen
1919 ஆம் சீனாவில் வாழ்ந்த சன்யாட்சன் என்ற நபருடைய கனவு திட்டம் தான் இந்த கார்ஜஸ் டேம். யாங்சி ஆற்றின் வெள்ளத்தை தடுக்கவும், மின்சாரத்தை உற்பத்தி செய்ய மட்டும் இந்த அணையை கட்ட அவர் நினைக்கவில்லை, உலகின் மிகப்பெரிய அணையை கட்டி சீனாவின் பலத்தை உலகுக்கு நிரூபிக்க நினைத்தார். ஆனால் அப்போது இருந்த அரசியல் அமைப்பால் இந்த அணையை கட்ட முடியாமல் போனது. 1992 ஆம் ஆண்டு இந்த அணையை கட்ட ஆரம்பித்தனர், ஆனால் அரசியல் காரணங்களால் பல பிரச்சனைகளையும் சந்தித்தனர். அதாவது அணையை கட்ட ஒதுக்கும் நிதியில் ஊழல் நடப்பதாக குற்றசாட்டு எழுந்தது.

Three gorges dam
2.3 கிலோ மீட்டர் நீளமும் 595 ஆதி உயரமும் கொண்டது, இந்த அணை அமெரிக்காவின் ஹூவர் டேமை விட ஐந்து மடங்கு பெரியது. இந்த அணையை கட்ட 22.7 மில்லியன் க்யூபிக் மீட்டர் கான்க்ரீட் கலவையை பயன்படுத்தி உள்ளனர். அதேபோல் 4 லட்சத்து 63 ஆயிரம் ஸ்டீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டீலை கொண்டு 63 ஐப்பில் டவர்களை உருவாக்க முடியும்.

Three gorges dam
இந்த அணை கட்ட நடந்த வேளையில் கிட்டத்தட்ட 100 பேர் பலியாகி உள்ளனர். இந்த அணையை கட்ட 23 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கட்ட 73 ஆயிரம் அமெரிக்க பில்லியன் டாலர்கள் செலவழிக்க பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த கார்ஜஸ் டெமின் நீர்த்தேக்க அளவு 660 கிலோமீட்டர். இந்த அணை மூன்று நோக்கங்களுக்காக கட்டப்பட்டது, யாங்சி ஆறிலிருந்து வரும் வெள்ளத்திலிருந்து தப்பிக்க வேண்டும். இந்த அணையிலிருந்து வரும் தண்ணீரை கொண்டு நீர் மின்சாரம் தயாரிக்க, இறுதியாக நீர்வழி போக்குவரத்து.

Three gorges dam slows the rotation of earth
இப்படி பல விஷயங்களை கொண்டுள்ள இந்த அணை பூமி சுற்றுவதையே தாமதிக்க செய்கிறது. ஆம், 660 கிலோமீட்டருக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் பூமி சுற்றும் நானோ செகண்ட் மாறப்பட்டுள்ளதாம், அதனால் இந்த அணையால் பூமி சுற்றுவதே தாமதாகி இருக்கிறது.
