பிரபல நடிகரான கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு கடந்த 2010-ஆம் ஆண்டு கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக இயக்குனர் மணிரத்தினத்திடம் ஆய்த எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக கார்த்தி வேலை பார்த்தார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்ததால் பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி, கொம்பன், கடைக்குட்டி சிங்கம், கைதி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் கார்த்தி நடித்துள்ளார்.

வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்திக் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதில் கார்த்தியின் வந்தியதேவன் கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. தனது சிறப்பான நடிப்பின் மூலம் கார்த்திக்கு தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது பிரபல நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவும். அந்த வகையில் நடிகர் கார்த்தியின் சிறு வயது புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

#image_title
