சின்னத்திரை நடிகை கடந்த 2011-ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து இளவரசி, சரவணன் மீனாட்சி, நொச்சிபுரம், இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல சீரியல்களில் ரச்சிதா நடித்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு பாரிஜாதா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ரச்சிதா அறிமுகம் ஆனார். தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரச்சிதா பிரபலமானார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான தினேஷ் என்பவரை ரச்சிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் போட்டியாளராக பங்கேற்றார். தினேஷும் ரச்சிதாவும் சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது ரங்கநாயகா என்ற கன்னட படத்தில் ரட்சிதா ஹீரோயினாக நடித்துள்ளார்.
அந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது சேலையில் ரச்சிதா பதிவிட்ட புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.