என்னதான் இசைஞானி, இசையில் இவருக்கு நிகரில்லை என பெருமையாக சொன்னாலும், இளையராஜாவின் குணத்துக்கு அவரின் ரசிகர்களே எதிரி தான். ஆம், அவர் பாடலை விரும்பி கேட்போம், ஆனால் அவரின் அகங்காரம், குணம், கர்வம் எங்களுக்கு பிடிக்காது என சொல்வோர் அதிகம் உண்டு.

Ilaiyaraja
என் பாட்டில் தான் நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள் என சொன்னது, எஸ்.பி.பி இடம் ரைட்ஸ் கேட்டு பணம் பெற பார்த்தது. ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய ஆஸ்கரை கிண்டலாக விமர்சித்தது என அடிக்கி கொண்டே போகலாம். ஏன் இளையராஜாவுக்கு இவ்வளவு கர்வம் என பலர் குழம்பி போயுள்ளனர். இப்போது அவரின் வாழ்க்கை படம் வேற தயாராகிறது. அதில் நிச்சயம் இந்த விஷயங்கள் வைக்க வேண்டும் என ஒருபக்கம் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Rohini and ilaiyaraja
இளையாராஜா இப்படி ஆணவ ராஜாவாக பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார். அப்படி ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது, இளையராஜாவும் சங்கரும் ஒரே மேடையில் நின்று இருந்தனர். அந்த நிகழ்வை தொகுத்து வழங்கிய நடிகை ரோகினி சங்கரிடம் உங்கள் ரசிகர்கள் இந்த காம்போவை காண காத்திருக்கிறார்கள் என்று தான் கூறினார். இளையராஜாவிற்கு கோபம் வந்துவிட்டது, நீ என்ன அவரிடம் எனக்கு வாய்ப்பு கேட்கிறாயா ?

Ilaiyaraja worst behaviour
இதெல்லாம் எனக்கு பிடிக்காது, இப்படியெல்லாம் கேட்காத, அவர் அவருக்கு யாருடன் செட் ஆகுமோ அவர்களுடன் சேர்கிறார் அப்படியே இருக்கட்டும் என சொன்னார். இதை பார்த்த அனைவரும் திகைத்து போனார்கள், அவர் என்ன கேட்டார், இவர் ஏன் இபப்டி கோபப்படுகிறார் என்று. இதுவும் ராஜா படத்தில் இடம்பெறுமா என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.