நடிகை ஷில்பா மஞ்சுநாத் கடந்த 2013-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் கர்நாடகா எனும் பட்டத்தை வென்றார். பின்னர் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான லைஃப் சூப்பர் குரு என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் திரைப்படத்தை தொடங்கினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு முன் கரு மலே 2 என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ரோஜா பூ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காளி திரைப்படத்தில் பார்வதி என்ற கேரக்டரில் பிரபலமானார்.
பின்னர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ஷில்பா நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணம்மா உன்ன என்ற பாடல் மாபெரும் அளவில் ஹிட்டானது.

#image_title
இந்த நிலையில் நடிகை ஷில்பா தனது 32 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram