ப்ளாக்பஸ்டர் ஹிட்டான முதல்வன் 2 எடுக்க தயாரான சங்கர்.. அங்க தான் ஒரு டுவிஸ்ட் இருக்கு..!!

By Priya Ram

Published on:

பிரபல இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் திரைப்படம் உருவானது. இந்த திரைப்படம் 1999-ஆம் ஆண்டு ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்தார். மேலும் ரகுவரன், சுஷ்மிதா சென், வடிவேல், விஜயகுமார் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் முதல்வன் படத்தில் நடித்தனர்.

   

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. முதல்வன் திரைப்படம் டப்பிங்கில் தெலுங்கு மொழியிலும் ரிலீசானது. ஹிந்தியில் நாயக் என்ற பெயரில் இந்த படம் எடுக்கப்பட்டது. ஹிந்தியில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார்.

கடந்த 2000 ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது முதல்வன் படத்திற்கு கிடைத்தது. சங்கர் இயக்கும் படங்கள் என்றாலே பிரம்மாண்டமாக தான் இருக்கும். இந்தியன் 2, 3 ஆகிய படங்களை இயக்குவதில் அவர் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தயார் செய்வதில் சங்கர் முனைப்பாக உள்ளாராம். ஆனால் தமிழில் இல்லையாம். ஹிந்தியில் நாயக் என்ற பெயரில் உருவான முதல்வன் படத்தின் ரீமேக்கின் இரண்டாவது பாகத்தை அனில் கபூரை வைத்து எடுக்க தான் ஷங்கர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Shankar

author avatar
Priya Ram