விஜய் கூட இப்படி ஒரு பாட்டுக்கு நடனமாடுனதுக்கு இதுதான் காரணம்… மனம் திறந்து பேசிய நடிகை ரோஜா…

By Begam on மாசி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அப்படி1999 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் ‘நெஞ்சினிலே’. இந்த திரைப்படத்தை அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் இயக்கியிருந்தார்.

   

இத்திரைப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஈஷா கபூர் நடித்திருப்பார்.  தேவா இசையமைபில் வெளிவந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் பலவும் இன்றும் தளபதி 90′ ஸ் ரசிகர்களின் பாவரிட் லிஸ்டில் இருக்கும். ‘தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா’  என்ற பாடல் கண்டிப்பாக யாராலும் மறந்திருக்க முடியாது.

   

 

அந்த பாடலில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிகை ரோஜா குத்தாட்டம் போட்டிருப்பார். நடிகை ரோஜா பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவரும் விஜய்யும் இணைந்து போட்ட குத்தாட்டம் சூப்பர் ஹிட் அடித்தது. முன்னணி நடிகையான இவர் எப்படி இந்த பாட்டுக்கு நடனமாடினார்..? என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினார்.

இதுகுறித்து 2000ல் சன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியானது தற்பொழுது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ‘ பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆக இருப்பதால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, கெஸ்ட் ரோலாக நடிப்பது இப்பொழுது சாதாரணமாக ஆகிவிட்டது. அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேன் என்று இயக்குனர் என்னை தேர்வு செய்தது எனக்கு தான் பெருமை. அதனால்தான் நான் அந்த பாட்டுக்கு விஜய் உடன் நடனமாடினேன்’ என்று மனம்திறந்துள்ளார் நடிகை ரோஜா. இதோ அந்த வீடியோ…