சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர காரணம் என்ன என்பது குறித்து அந்த சீரியலில் நடித்த பாம்பே ஞானம் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் பல சீரியல்களை இயக்கி புகழ் பெற்றவர் தான் இயக்குனர் திருச்செல்வம். கோலங்கள் என்ற சீரியல் மூலமாக பிரபலமான இவர் பல சீரியல்களை இயக்கியிருக்கின்றார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்கிய சீரியல் தான் எதிர்நீச்சல். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மிகவும் பரபரப்புடன் இந்த சீரியலை இயக்கி வந்தார். சீரியல் தொடங்கிய இரண்டு வாரத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மட்டும் இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கிலும் டாப் 3 பட்டியலில் நுழைந்தது. இந்த சீரியல் முழுக்க முழுக்க ஆணாதிக்கம் கொண்ட ஒருவரின் பிடியிலிருந்து பெண்கள் எப்படி வெளிவர வேண்டும் எப்படிப்பட்ட சவால்களை சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு சில விமர்சனங்கள் எழுந்த போதிலும் பலரின் ஃபேவரிட் சீரியலாக இருந்து வந்தது.
எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வந்தார் அதைத் தொடர்ந்து இந்த சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்தவர் ஆதிகுணசேகரன். இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வில்லனை கூட நேசிக்க முடியும் என்பது இவரை பார்த்து தான் தெரிந்தது . அந்த அளவுக்கு தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவரின் உயிரிழப்புக்கு பிறகு அந்த சீரியல் சற்று தொய்வை சந்தித்தது. பின்னர் அந்த கதாபாத்திரத்தில் வேலு ராமமூர்த்தி நடித்திருந்தாலும் அந்த அளவுக்கு வரவேற்பு பெறாத காரணத்தினால் ஜூன் எட்டாம் தேதி இந்த சீரியலை முடித்துவிட்டார் இயக்குனர் திருச்செல்வம். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று இருக்கு பேட்டி அளித்திருக்கும் நடிகை பாம்பே ஞானம் கூறியதாவது: “இந்த சீரியல் துவங்கும் போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
குறிப்பாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவை அனைவரும் ரசித்து வந்தார்கள். மாரிமுத்துவின் இறப்பிற்கு பின்னர் சீரியல்களில் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள். மிகக் கூறியகிய காலத்திலேயே இந்த சீரியல் முடிவடைந்து விட்டது.
இந்த சீரியல் முடிவடைய மற்றொரு முக்கிய காரணம் சில மாதங்களாக சீரியலில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட சரிவும்தான். அதுமட்டுமில்லாமல் சேனல் தரப்பிலிருந்து சீரியலை வேறு நேரத்தில் மாற்ற சொன்னார்கள். ஆனால் இயக்குனர் திருச்செல்வத்துக்கு அது ஏற்றதாக இல்லை என்ற காரணத்தினால் இந்த சீரியலை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டார்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்