பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் கடந்த 1992-ஆம் ஆண்டு ரிலீசான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். ஏ.ஆர் ரகுமான் பாடல்களை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஜென்ரல் மேன், கிழக்கு சீமையிலே, இந்தியன், காதல் தேசம், ரட்சகன், ஜீன்ஸ், முதல்வன், படையப்பா சூப்பர் ஹிட் படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு ரிதம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக மீனா நடித்தார். ரிதம் படத்தை வசந்த் இயக்கினார். இந்த படத்தில் ஜோதிகா, ரமேஷ், அரவிந்த், லட்சுமி, நாகேஷ், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரிதம் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா..? ரிதம் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் ஐம்பூதங்களை மையமாக வைத்து ஏ ஆர் ரகுமான் உருவாக்கினார். ரிதம் படத்தில் இடம் பெற்ற நதியே நதியே காதல் நதியே என்ற பாடல் நீரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
காற்றே என் வாசல் வந்தாய் பாடல் காற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன் பாடல் நிலத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பாடல் நெருப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. கலகலவென பொழியும் மேகம் என்ற பாடல் ஆகாயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.