பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா. இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். வனிதா கடந்த 1995-ஆம் ஆண்டு ரிலீசான சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு மாணிக்கம், காக்கை சிறகினிலே, நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு உள்ளிட்ட படங்களில் வனிதா நடித்தார்.
ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வனிதா தொகுத்து வழங்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவு வனிதாவுக்கு வெள்ளித் துறையில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் மூன்றில் வனிதா போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்றார்.
இப்போது வனிதா யூடியூப் சேனலை தொடங்கி அதன் மூலமும் சம்பாதித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ஆவது ஆண்டு படையப்பா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார். இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த நிலையில் வனிதா படையப்பா திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க எனக்குத்தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. நான் அந்த வாய்ப்பை நிராகரித்து வேண்டாம் என கூறிவிட்டேன். அதனால் தான் எனது தங்கச்சிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என கூறியுள்ளார். படையப்பா திரைப்படத்தில் ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமாரின் தங்கை ப்ரீத்தா நடித்தார். அந்த கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.