Connect with us

CINEMA

ராஜ்கிரணை பார்த்து தேம்பி அழுத வடிவேலு.. அது வெறும் நடிப்பு… உண்மையை சொன்ன பிரபலம்..

வளர்த்து விட்டவரை நாம் மறக்கவே கூடாது, குறிப்பாக சினிமாவில் ஒருவர் நம்மை அறிமுகப்படுத்துகிறார், கஷ்டகாலத்தில் அழைத்து வாய்ப்பு கொடுக்கிறார் என்றால் அவரை வாழ்நாள் முழுக்க மறக்க கூடாது. இது நாம் சொல்லவில்லை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே கூறியுள்ளார். தன்னை நடிகனாக அறிமுகப்படுத்திய கே.பாலசந்தரை கடவுளுக்கு இணையாக பாவித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி, அதேபோல் தனக்கு கமர்ஷியல் வெற்றிகளை கொடுத்த எஸ்.பி.முத்துராமனை எங்கு பார்த்தாலும் காலில் விழுந்து வணங்குவார்.

Karthi and ameer

   

இந்த குணம் மற்ற நடிகர்களுக்கும் இருக்குமா என்றால் சந்தேகம் தான். தன்னை பருத்திவீரனில் அறிமுகப்படுத்திய அமீரை கண்டுகொள்ளவே இல்லை கார்த்தி. தன்னை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டிய இயக்குனர் ஹரியின் படத்தில் அடுத்து நடிக்கவே இல்லை நயன்தாரா. தன்னை அறிமுகபப்டுத்திய இயக்குனரை பிளாக் செய்தார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

Vadivelu becomes emotional on seeing rajkiran

இப்படி சொல்லி கொண்டே போகலாம், இதில் நடிகர் வடிவேலு மட்டும் விதிவிலக்கா என்ன ? தன்னை அறிமுகப்படுத்திய ராஜ்கிரணை வடிவேலு கண்டுகொள்ள கூட இல்லை. ஆனால் சமீபத்தில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் ராஜ்கிரணை பார்த்ததும் அருகில் சென்று கதறி அழுதார் வடிவேலு. இந்த நிகழ்வு இணையத்தில் வைரலானது. அடடே வடிவேலுவா இப்படி என பலரும் ஆச்சர்யப்பட்டனர். ஆனால் இது அனைத்தும் நடிப்பு என கூறியுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன்.

Anthanan about vadivelu

இதுகுறித்து அவர் கூறும்போது, வடிவேலுவை பற்றி நமக்கு தெரியும், இது அனைத்தும் நடிப்பு தான். ஏன் வடிவேலு நன்றாக இருந்த சமயத்தில் ராஜ்கிரணை சந்தித்து இருக்கலாமே. அந்த சமயத்தில் ராஜ்கிரண் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டார், ஆனால் வடிவேலு ஒரு படத்திற்கு பத்து லட்சம் சம்பளம் வாங்கினார். அப்போது ராஜ்கிரணுக்கு உதவி இருக்கலாமே. அப்போது அப்படி செய்யவில்லை.

Vadivelu and rajkiran

இப்போது கலைஞர் நூற்றாண்டு விழாவில் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதை பார்த்த ராஜ்கிரணும் நெகிழ்ந்து போய் இவ்வளவு பாசம் வைத்துள்ளான் என கூறி, அருகில் ஒரு சேரை போட்டு அமர வைத்துள்ளார். வடிவேலு டாப்பில் இருந்தாவது ஒரு படம் அவருக்கு இலவசமாக செய்து தரலாம், ஆனால் இப்போது அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது என கூறியுள்ளார் அந்தணன். என் ராசாவின் மனசிலே படம் மூலம் எ=வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top