சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிங்கர் ராஜலட்சுமி தற்போது படம் ஒன்றில் நடிகையாக களமிறங்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்து தற்போது 9வது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் கானா பாடல்கள் பாடும் போட்டியாளர்களை களமிறக்கி வருகின்றனர்.அந்த வகையில் சூப்பர் சிங்கரில் கானா பாடல்கள் பாடி மக்கள் மனதில் இடம் பெற்றவர்கள் செந்தில் ராஜலட்சுமி ஜோடி.
இவர்கள் சமீபத்தில் பிரம்மாண்ட வீட்டு ஒன்றை கட்டினர். அந்த வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகின்றனர். பல்வேறு கச்சேரிகளும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்பொழுது ராஜலட்சுமி புதிய அவதாரம் எடுத்துள்ளார். தற்பொழுது அவர் ஒரு படத்தில் நடிகையாக களமிறங்கியுள்ளார். இத்திரைப்படத்தின் பெயர் லைசன்ஸ். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ராஜலட்சுமி இது?’ என்று ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.
வைரலாகும் புகைப்படம் இதோ…
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ஒருவழியாக (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில்…
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக்…
கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து…
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப்…
சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 10 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.…